திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (11:45 IST)

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவேன்..! திருமாவளவன் அறிவிப்பு..!

தனது சொந்த தொகுதியான சிதம்பரத்தில் தான் போட்டியிடுவேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 
மக்களவைத் தேர்தலில் ஒட்டி தொகுதி பங்கீடு,  கூட்டணி பேச்சுவார்த்தை என தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 
 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மக்களவைத் தேர்தலில் தனது சொந்த தொகுதியான சிதம்பரத்தில் தான் போட்டியிடுவேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 
பாஜகவை விட்டு அதிமுக தனியாக பிரிந்து வந்தாலும் பாஜக விடுவதாக இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

 
அதிமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளி அதனை பலவீனப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாகவும் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.