Daily Horoscope
✕

10 நாள் போலீஸ் ஷ்டேசனில் கையெழுத்து போடணும்!.. அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உத்தரவு!..

Updated: சனி, 4 ஜூலை 2026 (08:52 IST)
கடந்த மாதம் 20ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் ஒரு திமுக விழாவில் பேசிய திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் முதல்வர் விஜயை ஒருமையிலும், அவதூறாகவும் பேசினார்.. விஜயை ஒரு நடிகையோடு தொடர்பு படுத்தியும், விஜய் மனைவியை பற்றியையும் மிகவும் மோசமாக பேசினார்.

இது தவெகவினருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்த ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்கிற நிலையில் சென்னை நீதி சென்னை உயர்நீதிமன்றத்தில் அனித ராதாகிருஷ்ணன் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். ஆனால் அதை நீதிமன்றம் ஏற்கவில்லை.

இதையடுத்து, நேற்று ஆத்தூர் காவல் நிலைய போலீசார் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்து திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரிடம் மேஜிஸ்ட்ரேட் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினார்.. அதன்பின், அனிதா ராதாகிருஷ்ணனை சொந்த ஜாமினில் விடுவித்த மேஜிஸ்ட்ரேட் 10 நாளைக்கு காவல்நிலையில் கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார்..<>

எல்லாம் காட்டு

இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, ராகுல் காந்தி மரணம் குறித்து சர்ச்சை பதிவு.. கங்கனா ரனாவத் மீது வழக்குப்பதிவு...

டெலிவரி ஊழியர்கள் என்ன கொத்தடிமைகளா? பாஜகவுக்கு ராகுல் காந்தி கேள்வி..

வங்கக்கடலில் புயல் சின்னம் தோன்றியும் சென்னைக்கு மழை இல்லையா? என்ன சொல்கிறது வானிலை அறிக்கை...

பெயரில் ஒரு எழுத்து, இனிஷியல். பிறந்த தேதி தப்பாக இருந்தால் விண்ணப்பம் ரத்து: TNTET-2 தேர்வுக்கு நிபந்தனைகள்..

அரிசி, பருப்பை அளவுக்கு மீறி வைத்திருந்தால் ஜெயில்.. பதுக்கல்காரர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை...

அடுத்த கட்டுரையில்
Show comments