1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Former Minister Anitha Radhakrishnan Arrested After Dismissal of Anticipatory Bail Over Remarks Against CM Vijay

வழக்கறிஞர் வந்தா தான் வருவேன்.. இல்லனா எங்கயும் வர மாட்டேன்.. போலீசாருடன் வாக்குவாதம் செய்த அனிதா ராதாகிருஷ்ணன்...

அனிதா ராதாகிருஷ்ணன்
தமிழக அரசியல் களத்தில் தற்போதைய மிக ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது விவகாரம். தமிழக வெற்றி கழக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்யை ஒருமையில் பேசியதாக எழுந்த கடுமையான புகாரை அடுத்து, இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கைது நடவடிக்கையை தவிர்க்க அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இருப்பினும், சென்னை உயர்நீதிமன்றம் அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. மனு தள்ளுபடி செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே, ஆய்வு கூட்டத்தில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணனை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். அப்போது அவரது கையை பிடித்து வலுக்கட்டாயமாக அழைத்து செல்ல முயன்றபோது, "வழக்கறிஞர் வந்தா தான் நான் வருவேன்.. இல்லனா எங்கயும் வர மாட்டேன்..!" என்று அவர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
 
தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, கைது செய்யப்பட்டுள்ள முதல் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிரடி கைது நடவடிக்கையைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் உடனடியாக வீதிகளில் இறங்கி சட்டென போராட்டத்தில் குதித்தனர். இதனால் அந்தப் பகுதியே பெரும் போர்க்களமாக மாறி, தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
தவெக ஆட்சியை கவிழ்க்க 180 கோடி!.. கார்ப்பரேட் கம்பெனி யார்?.. பரபர அப்டேட்