Daily Horoscope

அவனுக்கு ஒன்னும் தெரியாது!... மீண்டும் விஜயை அட்டாக் பண்ணிய அனிதா ராதார்கிருஷ்ணன்..

Updated: ஞாயிறு, 12 ஜூலை 2026 (14:55 IST)
திமுக முன்னாள் அமைச்சர் அனிதா கிருஷ்ணன் தொடர்ந்து தவெக அரசையும், முதலமைச்சர் விஜயையும் மிகவும் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசி வருகிறார்.
இது தொடர்பாக ஏற்கனவே போலீசார் அவரை கைது செய்தனர். ஆனால் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று விடுதலையானார். இந்நிலையில்தான் மீண்டும் அவர் முதலமைச்சர் விஜயை அவதூறாக பேசியிருக்கிறார்..

நான் ஐந்து நிமிடம் பேசினேன் கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டுட்டாங்க என ஒருத்தன் மார்தட்டி சொல்றான்.. சாயங்காலம் 6 மணிக்கு போனா காலைல 10 மணிக்குதான் எந்திரிப்பான்.. அவனுக்கு தமிழகத்தில் என்ன நடக்குதுன்னு தெரியாது என்று விஜயின் பெயரை சொல்லாமல் பேசினார்

மேலும், நான் பேசியதற்கு என்னை கைது செய்தார்கள்.. நான் ஐந்து வருடம் கூட சிறையில் இருப்பேன்.. ஆனால் உன் ஆட்சி என்ன ஆகும் தெரியுமா? தவெக ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். சினிமாவில் நடிக்கிற மாதிரி இங்கயும் நடிக்கலாம்னு அவர் நினைக்கிறார்.. இந்த வேஷம் எல்லாம் தமிழ்நாட்டில் எடுபடாது’ என்று பேசியிருக்கிறார்.<>

எல்லாம் காட்டு

ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ ரிலீஸ் எதிரொலி.. வெறும் ரூ.69,990க்கு ஐபோன் 17 ப்ரோ.. எப்படி வாங்குவது?

இடைத்தேர்தலில் மம்தா போட்டியிட்டால் வாபஸ் பெறுவோம்.. திரிணமூல் அதிருப்தி அணி அறிவிப்பு...

வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். இல்லையென்றால், அதே மொழியில் பதில் சொல்வோம்: அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை..

தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்.. இன்று ஒரே நாளில் 46 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்...

பிரிக்ஸ் அமைப்பில் இணைய விண்ணப்பித்த பாகிஸ்தான்.. இந்தியாவின் கடும் எதிர்ப்பால் நிறைவேறாத ஆசை...

அடுத்த கட்டுரையில்
Show comments