Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்பதான் சி.எம். ஆயிட்டீங்களே!. கண்டுபிடிச்சி சொல்லுங்க!.. விஜயை லாக் பண்ணும் அமீர்!..

Updated: திங்கள், 1 ஜூன் 2026 (13:11 IST)
தற்போதைய முதல்வர் விஜய் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கரூருக்கு சென்ற போது அவரை காண பல ஆயிரம் மக்கள் கூடியிருந்தனர். விஜய் கரூருக்கு சென்றபோது இரவு 7 மணியாகிவிட்டது. அங்கு 20 ஆயிரத்திற்கும் மேல் கூடியிருந்ததால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலரும் நெரிசலில் சிக்கினர். இதில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 41 பேர் உயிரிழந்தனர்.
 
இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையில் விஜய், ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த் உள்ளிட்ட முக்கிய தவெக நிர்வாகிகளும், கரூர் மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். விஜய் இரண்டு முறை டெல்லி சென்று நேரில் வாக்குமூலம் அளித்தார். ஆனால், சிபிஐ கரூர் சம்பவம் தொடர்பான அறிக்கையை எப்போது வெளியிடும் என யாருக்கும் தெரியவில்லை.
 
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த இயக்குனர் அமீர் ‘கரூர் சம்பவம் மிகப்பெரிய அநீதி.. உண்மை குற்றவாளி யார்? அதை செய்தது முந்தைய ஆட்சியாளர்கள்தான் என்றால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.. அல்லது நடக்காத ஒன்றை நடந்ததாக நீங்கள் சொன்னீர்களா? இப்போது உங்கள் கையில் அதிகாரம் இருக்கிறது.. நீங்கள் கேட்பதை செய்து கொடுக்க ஒன்றிய அரசின் சிபிஐயும் தயாராக இருக்கிறது.. தயவு செய்து கண்டுபிடித்து மக்களுக்கு சொல்லுங்கள்’ எனக் கேட்டிருக்கிறார்.

எல்லாம் காட்டு

திமுக பத்தி எல்லாத்தையும் சொன்னா தாங்கமாட்டீங்க!.. சட்டசபையில் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!..

இதோட முடியல!.. நேபாளத்திற்கு இன்னொரு ஆபத்து இருக்கு!. சீனா எச்சரிக்கை!..

நேபாளம் வெள்ளம்!.. பனிப்பாறை உடைந்ததே காரணம்!.. சேட்டிலைட் மூலம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு!..

அமைச்சர் ராஜ்மோகன் கூறிய பிச்சை என்ற வார்த்தை.. திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..

திடீரென இருக்கை மாறிய முதல்வர் விஜய்.. முதலமைச்சருக்கான தனி இருக்கையில் அமராதது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments