வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 29 ஜூன் 2022 (08:43 IST)

மீண்டும் பொதுக்குழு... முந்திக்கொண்டு கோர்ட் போன ஈபிஎஸ்!

பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஈபிஸ் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. 

 
கடந்த 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது, அந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை உள்பட தனித் தீர்மானங்கள் நிறைவேற்ற கூடாது என உயர்நீதிமன்ற தீர்ப்பு அளித்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பிற்கு ஆதரவாகவும், ஈபிஎஸ் தரப்பிற்கு பாதகமாகவும் இந்த தீர்ப்பு அமைந்தது. 
 
இதனைத்தொடர்ந்து பொதுக்குழுவில் ஏற்பட்ட சலசலப்புகளால் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல் முடிந்தது. இதனைத்தொடர்ந்து வரும் ஜூலை 11 மீண்டும் அதிமுக பிதுக்கிழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போதும் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதால்  உச்சநீதிமன்றத்தில் ஈபிஸ் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. 
 
ஆம், பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஈபிஸ் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. பொதுக்குழு, செயற்குழு விவகாரங்களில் தலையிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை. பொதுக்குழுவில் எடுக்கும் முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்த கூடாது என உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.