1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2022 (14:57 IST)

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: அமைச்சர் மா சுப்பிரமணியன்

Subramanian
ஜூலை 11ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் மீண்டும் அதிமுக பொதுக்குழு 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரனோ வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது
 
இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள், ‘அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் திட்டமில்லை என்றும் அரசு விதித்துள்ள கொரோனா வைரஸ் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுக்குழுவை நடத்தலாம் இருக்கலாம் என்றும் முகக்கவசம் அணிவதில் இருந்து எந்தவித விதிவிலக்கும் அளிக்கப்படுவதில்லை என்றும் கூறினார்.