செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2022 (16:38 IST)

வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்திலேயே மீண்டும் பொதுக்குழு!

சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்திலேயே மீண்டும் பொதுக்குழுவை நடத்த அதிமுக முடிவு செய்துள்ளது. 
அதிமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் கூடியபோது அனைத்து தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பொதுக்குழு கூட்டம் சிறிது நேரத்தில் முடிவடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என அவை தலைவர் தமிழ்மகன் கூறியது ஓபிஎஸ் தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்கூட்டம் இடம் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த அதிமுக பொதுக்கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்திற்கு பதிலாக ஈசிஆர் அல்லது ஓ.எம்.ஆர் பகுதியில் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. 
 
இதற்காக இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்ற நிலையில் சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்திலேயே மீண்டும் பொதுக்குழுவை நடத்த அதிமுக முடிவு செய்துள்ளது. கடந்த முறை அங்கு பொதுக்குழு கூட்டம் நடந்த போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு 5 மணி நேரத்திற்கு மக்கள் அவதிக்குள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.