ஊடகம், வழக்கறிஞர் ஸ்டிக்கர் வாகனங்களில் பயன்படுத்த தடை இல்லை: ஆனால் ஒரு நிபந்தனை..!
வாகனங்களின் நம்பர் பிளேட்டில் எந்தவிதமான ஸ்டிக்கரும் ஒட்டக்கூடாது என்றும் அதையும் மீறி ஓட்டினால் இன்று முதல் அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறை அறிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் மருத்துவர், ஊடகம், வழக்கறிஞர்கள் போன்றவர்களுக்கு இதில் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் அந்தந்த துறையை சேர்ந்தவர்கள் என்பதை தெரிவிக்கும் வகையில் ஸ்டிக்கர் ஒட்ட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.
இந்த நிலையில் போலீசார் இது குறித்து விளக்கம் அளித்த போது ஊடகம், வழக்கறிஞர், மருத்துவர்கள் ஆகியோர் தங்கள் துறை தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது என்றும், ஆனால் அதே நேரத்தில் இந்த ஸ்டிக்கர்களை நம்பர் பிளேட்டில் ஒட்டக்கூடாது என்றும் வாகனங்களில் வேண்டுமானால் ஒட்டிக் கொள்ளலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
அதே சமயம் இந்த துறை சாராதவர்கள் போலியாக ஸ்டிக்கர் ஒட்டினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது
Edited by Mahendran