வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 2 மே 2024 (07:16 IST)

நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் இன்று முதல் அபராதம்.. வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

சென்னையில் தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்  ஒட்டியிருந்தால்  இன்று முதல் அபராதம் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் ஸ்டிக்கர் இருந்தால் அகற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
முதல் முறை ரூ.500, 2வது முறை ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை  போக்குவரத்து போலீஸ் தெரிவித்துள்ளது. மேலும் நம்பர் பிளேட்டில் உள்ள ஸ்டிக்கர்களை அகற்ற ஏற்கனவே போலீஸ் அறிவுறுத்திய  நிலையில் இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வாகனங்களில் நம்பர் பிளேட்டை தவிர வேறு ஏதாவது எழுதப்பட்டிருந்தால், அல்லது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  எனவே வாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதுவும் ஒட்ட வேண்டாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. 
 
நம்பர் பிளேட்டுகளில் வேலை செய்யும் துறைகள், சின்னங்கள் ஆகியவை எதுவும் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விதி இன்று முதல் அமலுக்கு வருகிறது.
 
Edited by Siva