1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (08:00 IST)

இன்ஸ்டாகிராம் காதலரை தேடி வீட்டைவிட்டு வெளியேறிய 3 சிறுமிகள்.. பெற்றோர் அதிர்ச்சி..!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம் ஒருவரை காதலித்த நிலையில் அவரை நேரில் சந்திக்க தன்னுடன் இரண்டு சிறுமிகளை அழைத்துச் சென்ற நிலையில் அந்த சிறுமிகளை ரயில்வே காவல்துறையினர் பத்திரமாக அமைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே 14 வயது சிறுமி வருவார் இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபர் ஒருவருடன் பழகி வந்த நிலையில் அவரை நேரில் பார்க்க முடிவு செய்து தன்னுடன் இரண்டு சிறுமிகளை அழைத்துச் சென்றுள்ளார்

தேங்காய் பட்டணம் கடற்கரைக்குச் சென்ற அந்த சிறுமி தனது இன்ஸ்டா காதலரை அழைத்துள்ள நிலையில் அந்த வாலிபர் நேரில் வந்து அந்த சிறுமியை காதலிக்கவில்லை என்று கூறி சென்றுவிட்டார்

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியும் அவருடைய தோழிகளும் எங்கு செல்வது என்று தெரியாமல் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து உள்ளனர். அப்போது அங்கு வந்த ரயில்வே போலீசார் அவர்களை மீட்டு விசாரணை நடத்திய நடத்தி புதுக்கடை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனை அடுத்து சிறுமிகள் பத்திரமாக அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இன்ஸ்டாகிராம் காதலரைத் தேடி 14 வயது சிறுமி வீட்டை விட்டு சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva