Daily Horoscope
✕

விஜய் சி.எம். ஆவதை தடுக்க உதயநிதியும், பழனிச்சாமி மகனும் பேசினாங்க!.. ஆதவ் அர்ஜுனா பகீர்!..

Updated: வெள்ளி, 15 மே 2026 (08:49 IST)
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், ஆட்சியமைக்க மேலும், 10 எம்.எல்.ஏக்கள் தேவை என்கிற நிலையில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டது. அவர்களின் ஆதரவு கிடைத்து தற்போது விஜய் முதல்வராக மாறியிருக்கிறார்..

அதேநேரம் விஜய் முதல்வராவது தடுக்க அதிமுக, திமுக தரப்பு பல முயற்சிகளிலும் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. திமுக வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க அதிமுக ஆட்சி.. அதாவது எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் என ஒன்று பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது.. இல்லையென்றால் திமுக, அதிமுக இரண்டும் இணைந்து ஆதரவு கொடுக்க திருமாவளவனை முதல்வராக முன்னிறுத்தும் யோசனையும் பேசப்பட்டிருக்கிறது.இதையெல்லாம் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகமே செய்தியாளிடம் கூறினார்..

இந்நிலையில், நேற்று வில்லிவாக்கம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ‘திமுக தோற்ற பிறகு விஜய் முதல்வராவதை தடுப்பதற்கான முயற்சிகள் நடந்தது.. உதயநிதியும், எடப்பாடி பழனிச்சாமியின் மகனும் பேசினார்கள்.. இந்த பேச்சு வார்த்தைக்கு ஒரு தொழில் அதிபர் ஆளுநர் மாளிகையில் இருந்தபடி உதவினார். திமுக - அதிமுக கூட்டணியை கம்யூனிஸ்ட் தலைவர் பேபி ஆதரிக்க மறுத்தார்.. அதனால்தான் தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கிறது’ என பேசினார்.<>
About Author
பாலகிருஷ்ணன்

எல்லாம் காட்டு

பிரிக்ஸ் அமைப்பில் இணைய விண்ணப்பித்த பாகிஸ்தான்.. இந்தியாவின் கடும் எதிர்ப்பால் நிறைவேறாத ஆசை...

ஜெயிலில் இருக்கும் முன்னாள் பிரதமர் பேரன் ஆபாச படம் பார்த்தாரா? பெங்களூரு பரப்பன அக்ஹார சிறை அதிகாரி சஸ்பெண்ட்

மதுரை சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து.. குடோனாக மாறிய நிலையில் பயங்கர சேதம்...

லண்டனில் முதல்வர் விஜய் தங்கியுள்ள நட்சத்திர விடுதி.. ஒருநாள் வாடகை எத்தனை லட்சம்?

அதிமுக, திமுக ஏன் பொது வேட்பாளரை நிறுத்தவில்லை? பரபரப்பு தகவல்..

அடுத்த கட்டுரையில்
Show comments