1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. actor oru viral krishna rao sondied

பிரபல நடிகரின் மகன் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

ஒருவிரல் கிருஷ்ணாராவ்
நடிகர் ஒருவிரல் கிருஷ்ணாராவின் மகன் அழுகிய நிலையில் பூட்டிய வீட்டில் இருந்து சடலமாக மீட்கப் பட்டுள்ளார்.

1965ம் ஆண்டு வெளிவந்த ஒரு விரல் என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கிருஷ்ணாராவ். அப்படத்தைத் தொடர்ந்து அனைவரும் அவர் ஒரு விரல் கிருஷ்ணாராவ்  அழைக்கப்பட்டார். இவரது மகன் சிவாஜிராவ் (45). சென்னை பழவந்தாங்கல் அவ்வையார் தெருவில் வாடகை வீட்டில் வசித்துவந்தார்.திருமணம் செய்துகொள்ளாத அவர் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தார்.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக சிவாஜிராவின் வீடு பூட்டிக் கிடந்துள்ளது. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதை அடுத்து, அக்கம் பக்கத்தார் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றனர். அங்கே அழுகிய நிலையில் சிவாஜிராவின் உடல் மீட்கப்பட்டது. சிவாஜி ராவ் மரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
 
About Writer
Bala