3 நிமிஷத்துக்கு ஒரு டாப்பிக்!. விஜய் பேசுறதே ரீல்ஸ் வீடியோவுக்குதான்!.. ஆதவன் கமெண்ட்!..

Updated: செவ்வாய், 21 ஜூலை 2026 (18:09 IST)
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பின்னரும் அவர் தமிழக முதலமைச்சரான பின்னரும் இன்னும் நடிகராகவே இருக்கிறார்.. அதே உடல் மொழிகளில் பேசுகிறார். இன்னும் அவர் தன்னை முதலமைச்சராக உணரவில்லை என அரசியல் விமர்சவர்கள் சிலர் அவரை விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக திமுக இந்த கருத்தை முன் வைத்து விஜயை கடுமையாக விமர்சித்து வருகிறது.

தேர்தலுக்கு முன்பு எப்படி திமுகவை விமர்சித்தாரோ அது போலவே தற்போதும் அவர் திமுகவை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து பேசி வருகிறார். அவர் பேசும் பேச்சை தவெக ஐடி விங் மற்றும் விஜயின் விர்ச்சுவல் வாரியர்ஸ் சின்ன சின்ன வீடியோக்களாக கட் செய்து சமூக வலைதளங்களில் புரமோஷன் செய்து வருகிறார்கள்..

இந்நிலையில், சின்னத்திரை தொகுப்பாளர் மற்றும் நடிகர் ஆதவன் முதல்வர்  விஜய் பற்றி கருத்து தெரிவித்த போது ‘விஜய் எல்லா மேடைகளிலும் மக்கள்கிட்டயும் அவருக்கு என்ன ஆதாயமோ அதை மட்டும்தான் பேசுவார்.. விஜய் இதுவரை பேசிய எல்லா பேச்சையும் நான் பார்த்திருக்கிறேன்.. அதில் 20 நிமிஷம் பேசினா ஒவ்வொரு மூணு நிமிஷத்துக்கும் ஒரு டாபிக் மாத்துவார்.. அவர் ரீல்ஸ் கணக்கு பண்ணிதான் பேசுறார்.. அவர் பேசுவதை 3 நிமிஷ ஷார்ட்ஸ் வீடியோ கட் பண்ணி போடலாம். அதை கணக்கு பண்ணிதான் அவர் பேசுகிறார்’ என கூறியிருக்கிறார்..<>
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

கைது செய்தது சரிதான்.. இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக எம்.எல்.ஏ கைது குறித்து அழகிரி...

புதிய பாடத்திட்டத்தை உருவாக்க முதல் ஆலோசனை கூட்டம்.. விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் தீவிரம்...

புதிய பேருந்துகளுக்கு தவெக கொடி கலரா? சமூக வலைத்தளங்களில் விவாதம்...

அவரா இவரு?.. மார்கண்டேயன் மகன் யாருன்னு தெரியுதா?.. வைரல் வீடியோ!...

அமெரிக்காவின் எப்-1 மற்றும் ஜே-1 விசாவில் புதிய மாற்றம்.. இந்திய மாணவர்களுக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments