திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 17 மார்ச் 2022 (09:39 IST)

வீடு மாறினால் புதிய ரேசன் கார்டு வாங்க வேண்டுமா? அமைச்சர் விளக்கம்!

வீடு மாறினால் புதிய ரேஷன் கார்டு வாங்க வேண்டும் என்ற நடைமுறை பல ஆண்டுகளாக இருந்துவரும் நிலையில் இனி வீடு மாறினால் புதிய ரேஷன் அட்டை தேவையில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்
 
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின்படி வீடு மாறினாலும் ஊர் மாறினாலும் மாநிலமே மாறினாலும் ரேஷன் அட்டை மாற்றம் தேவை இல்லை என்றும் ரேஷன் அட்டை எண் மற்றும் ஆதார் எண் மட்டும் ரேஷன் கடையில் தெரிவித்து பயோமெட்ரிக் முறையில் தங்கள் அடையாளத்தை உறுதி செய்துகொண்டு ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
வீடு மாறினால் வேறு ரேஷன் அட்டை தேவையில்லை என்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.