1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் மீண்டும் சோதனை: அதிமுகவில் பரபரப்பு

திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அவ்வப்போது சோதனை நடைபெற்று வருகிறது என்பதை பார்த்துக் கொள்கிறோம் 
 
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல் வெளியானது மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் இன்று காலை திடீரென மீண்டும் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர் 
 
அவருக்கு சொந்தமான 60 இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப் படுவதால் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது