செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 மார்ச் 2022 (23:24 IST)

''20,000 இந்தியர்களை மீட்டு வந்துள்ளோம் ''- மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

உக்ரைன் மீது ரஷ்யா நாடு தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. 20 வது நாட்களுக்கு மேல் இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும்  போரில் இதுவரை ஆயிரக்கணக்கான ராணுவவீரர்களும், அப்பாவி மக்களும்  இருதரப்பிலும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்,   இந்திய அரசு ஆபரேசன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் உக்ரைனில் உள்ள  இந்தியர்களை மீட்டுள்ளது.

இதுகுறித்து இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளதாவது: உக்ரைனில் இருந்து 20,000   இந்தியர்களை பத்திரமாக மீட்டுள்ளோம். கடுமையாக சவால்களுக்கு மத்தியில் அவர்களை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.