திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 16 மார்ச் 2022 (17:12 IST)

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சாலை விபத்துக்கள் அதிகம்: மத்திய அமைச்சர்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சாலை விபத்துகள் அதிகம் என மத்திய தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பாராளுமன்றத்தில் இன்று இந்தியாவில் சாலை விபத்துகள் குறித்த கேள்வி ஒன்றுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பதிலளித்தார்
 
அதில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சாலை விபத்துக்கள் அதிகம் என்றும் கடந்த 2020 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மொத்தம் 45 ஆயிரம் சாலை விபத்துகள் நிகழ்ந்து உள்ளதாகவும் இதில் 8,000 பேர் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளார் 
 
மாநிலங்களவையில் சாலை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரின் இந்த பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது