1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 27 ஜூலை 2024 (15:58 IST)

கடல்சார் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு தடை கோரிய வழக்கு.! மத்திய அரசுக்கு அதிரடி உத்தரவு.!!

highcourt
இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் நடத்திய நுழைவுத் தேர்வுக்கு, தடை விதிக்க கோரிய வழக்கில்  மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  
 
கடந்த ஏப்ரல் 21ம் தேதி பிடெக் மெரைன் இன்ஜினியர், பிஎஸ்சி நாட்டிக்கல் சயின்ஸ் ஆகிய படிப்புகளுக்கான வெளியான அறிவிப்பு விளம்பரத்தில் முழு தகவல்களும் இல்லாமல் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனால் மாணவர்கள் குறிப்பாக ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எப்படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது என்பது குறித்த தெளிவான தகவல்கள் அந்த அறிவிப்பில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
 
திடீரென்று ஜூன் 8ம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு கம்யூட்டர் மூலம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் மூலம் இந்த தேர்வு நடத்தப்பட்டுள்ளதால் இது கிராமப்புற மாணவர்கள் மற்றும் ஏழை மாணவர்களால் சாத்தியமானதாக இல்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

தேர்வில் 47 ஆயிரம் பேர் கலந்துகொண்ட நிலையில் இவர்களில் தோராயமாக 14 பேரின் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் எனவே, விதிமுறைகளுக்கு முரணாக நடத்தப்பட்டுள்ள கடல்சார் கல்விக்கான பொது நுழைவு தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்
 
கடந்த 8ம் தேதி நடந்த நுழைவு தேர்வை ரத்து செய்து உரிய வழிமுறைகளை அமைத்து மீண்டும் தேர்வை நடத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.


மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி ஆஜராகி, தமிழக மாணவர்களுக்கு கடல்சார் படிப்புகளில் வாய்ப்பு கிடைத்துவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே இந்த தேர்வு நடத்தப்பட்டுள்ளது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவிட்டு, தேதி குறிப்பிடாமல் விசாரணையை ஒத்திவைத்தார்.