திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (20:39 IST)

130 கிமீ சைக்கிளிலேயே மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற முதியவர்

130 கிமீ சைக்கிளிலேயே மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற முதியவர்
கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரிக்கு சைக்கிளிலேயே தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற முதியவர் ஒருவரின் செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது
 
கும்பகோணத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் அறிவழகன். இவரது மனைவி மஞ்சுளா கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் தவித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமானது 
 
இதனை அடுத்து உள்ளூர் மருத்துவர்கள் உடனடியாக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் பேருந்து ரயில் உள்பட எந்த வாகனமும் இல்லாததால் எப்படி புதுவை செல்வது என்று அவர் திணறிக் கொண்டிருந்தார் 
 
இந்த நிலையில் திடீரென தனது பழைய சைக்கிளை எடுத்து அதில் மனைவியை உட்கார வைத்து கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரிக்கு 130 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். மனைவி மீதுள்ள அக்கறையை பார்த்த ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் அவரை பாராட்டியதோடு அவரது மனைவிக்கு தகுந்த சிகிச்சை அளித்ததோடு, மருந்து மாத்திரைகள் மற்றும் உணவும் தங்கள் செலவிலேயே வாங்கிக்கொடுத்து அவரை இலவசமாக தங்களது ஆம்புலன்சில் கும்பகோணத்திற்கு அனுப்பி வைத்தனர். தற்போது அறிவழகனின் மனைவி உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது