1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 8 ஏப்ரல் 2020 (16:02 IST)

புற்று நோயால் உயிரிழந்த தொலைக்காட்சி நடிகை!

தெலுங்கு தொலைக்காட்சிகளில் தொடர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை ஸ்ரீலெஷ்மி புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

தெலுங்கில் புகழ்பெற்ற ராஜசேகரா சரித்ரா, சின்னாரி மற்றும் ருத்துகீதம் ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் ஸ்ரீ லஷ்மி. இவரது தந்தை தேவதாஸ் ஒரு தொலைக்காட்சி தொடர் இயக்குனராவார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஸ்ரீலஷ்மி அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஆனால் சிகிச்சைப் பலனளிக்காமல்  அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

இவரது கணவர் பெடி ராமராவ் மற்றும் இரண்டு மகள்களிடம் இவரது உடல் ஒப்படைக்கப்பட்ட நிலையில் கொரோனா பீதி காரணமாக குறைவான நபர்களே அவரது இறுதி மரியாதை நிகழ்வில் கலந்து கொண்டனர்.