புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : திங்கள், 27 ஜனவரி 2020 (16:58 IST)

கண்களை துணியால் கட்டி 36 கி.மீ. சைக்கிள் ஓட்டிய மாணவி !

ஆரணி அருகே குடியரசு தினத்தை முன்னிட்டு 6 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் தன் கண்களை துணியால் கட்டிக்கொண்டு 36 கி.மீ,  சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முனுகபட்டை பகுதியில் வசித்து வருபவர் குமார். இவரது மகள் ஸ்ருதி. அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
 
மாணவி ஸ்ருதி கண்களை கட்டிக்கொண்டு ஓவியம் வரைதல்,  சைக்கிள் ஓட்டுதல் போன்ற சாதனைகளை செய்து வருகிறார்.
 
இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு மாணவி ஸ்ருதி 36 கி.மீ சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். முனுசுபட்டி பகுதியில் உள்ள்ள அரசுப் பள்ளியில் இருந்து ஆரணி வந்தவாசி சாலை வரை கண்களை கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்டியவ, திரும்பவும் சைக்க்கிளில் வந்தார். 
 
மேலும் மாணவி ஸ்ருதி கண்ணைக் கட்டிக் கொண்டு 36 கி.மீ சைக்கிள் ஓட்டி கின்னஸ் சாதனை செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.