வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 ஏப்ரல் 2020 (13:40 IST)

கும்பகோணத்தில் கொரோனா: தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வளையம்!

கும்பகோணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து அவர்கள் வசித்த பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பாதுகாப்பு வளையம் விரிவாக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 571 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் கும்பகோணத்தில் மேலும் மூவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் ஏற்கனவே ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டிருந்தது. மேற்கிந்திய தீவுகளில் இருந்து கும்பகோணம் திரும்பிய அவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் டெல்லி மாநாட்டிற்கு சென்றதாக பரிசோதனைக்கு சென்ற ஆறு பேரில் மூன்று பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அதை தொடர்ந்து அந்த மூன்று பேரின் வீடு மற்றும் அதை சுற்றி ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவரது குடும்பத்தில் உள்ளவர்கள், அக்கம்பக்கத்து வீட்டினருக்கும் கொரோனா இருக்கிறதா என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.