வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 35 லட்சம் மோசடி
கோவையைச் சேர்ந்த பெண் பொறியாளரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி 35 லட்சம் ரூபாயை ஏமாற்றிய தம்பதியினரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மீனா(22), பொறியியல் பட்டதாரியான இவர் வெளிநாட்டில் வேலைக்கு சேர முயற்ச்சித்துக் கொண்டிருந்தார். சின்னதடாகத்தைச் சேர்ந்த திவாகரன், மீனாவிடம் தான் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதாகவும், அங்கு நிறைய நிறுவனங்களை தனக்கு தெரியும் என்பதால், உனக்கு நான் வேலை வாங்கிக்தருகிறேன் எனக் கூறி மீனாவிடம் 35 லட்சம் பெற்றுள்ளார். இவை அனைத்தையும் திவாகரனின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார் மீனா.
ஆனால் அவர் சொன்னது போல் மீனாவுக்கு வேலை வாங்கித்தரவில்லை. தான் திவாகரனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மீனா மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மீனா கொடுத்த புகாரின் பேரில் திவாகரன் அவரது மனைவி உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.