தமிழ் ராக்கர்ஸ்காரனும் நல்ல வேலைக்காரன் தான்: மோகன் ராஜா
மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த ''வேலைக்காரன்' திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் ஒரு விழாவில் இந்த படம் குறித்து பேசிய இயக்குனர் மோகன்ராஜா, 'தற்போது திரையுலகமே மிக வேகமாக ஓடுகிறது. ஒரு படத்திற்கு ஒரு வாரம் தான் டைம் உள்ளது. அதற்குள் அந்த படத்தை பார்க்காவிட்டால் தியேட்டரை விட்டு ஓடிவிடும்.
'வேலைக்காரன்' படமும் அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓடும். பொங்கலுக்கு நிறைய பெரிய படங்கள் ரிலீஸ் ஆவதால் அதுவரை தான் ஓடும். இந்த நிலையில் என்னுடைய வேலைக்காரன் படத்தை தமிழ் ராக்கர்ஸ் கொஞ்சம் தாமதமாக போட்டால் அவனும் நல்ல வேலைக்காரன் தான். உண்மையில் தமிழ் ராக்கர்ஸ் விடிய விடிய விழித்து படத்தை அப்லோட் செய்யும் நல்ல வேலைக்காரன், உழைப்பாளி தான். என்னுடைய வேண்டுகோளுக்கு மதிப்பளித்து கொஞ்சம் தாமதமாக ரிலீஸ் செய்தால் தமிழ்ராக்கர்ஸ் நிச்சயம் நல்ல வேலைக்காரன் தான்' என்று மோகன்ராஜா கூறினார்