திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 19 டிசம்பர் 2017 (21:51 IST)

வேலைக்காரன் படத்தில் மூன்று கெட்டப்பில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்  நடிப்பில் வெளியாக உள்ள வேலைக்காரன் படத்தில் அவர் மூன்று கெட்டப்பில் நடித்துள்ளதாக  கூறப்படுகிறது.

இயக்குநர் மோகன்ராஜா இயக்கத்தில், அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் வேலைக்காரன். இந்தப்  படத்தில் கதாநாயகியாக நயன்தாரா முதல் முறையாக சிவகார்த்திகேயனோடு ஜோடி சேர்ந்துள்ளார். மேலும், ஃபகத் பாசில்,  பிரகாஷ்ராஜ், சினேகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 
24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா பிரமாண்டமான முறையில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். குப்பத்தை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு அக்காவாக சினேகா  நடித்துள்ளார். 
 
இப்படம் வரும் வெள்ளிக்கிழமை அன்று திரைக்கு வருகிறது. இதன் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் சிவகார்த்திகேயன் மூன்று கெட்டப்பில் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதுபோன்ற  இத்தனை கெட்டப்பில் இதற்கு முன் நடித்ததில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.