1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 18 டிசம்பர் 2017 (20:29 IST)

ஆர்.ஜே.வாக நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தில், அவர் ஆர்.ஜே.வாக நடித்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 
சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கியுள்ள படம் ‘வேலைக்காரன்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், வில்லனாக ஃபஹத் ஃபாசில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகிணி, ரோபோ சங்கர், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
 
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக், டீஸர், டிரெய்லர் போன்றவற்றைப் பார்க்கும்போது, குடிசைப் பகுதியில் வசிக்கும் இளைஞனான சிவகார்த்திகேயன், கார்ப்பரேட் அலுவலத்தில் வேலை பார்ப்பது போன்ற தோற்றம் கிடைத்தது.
 
ஆனால், சமீபத்தில் வெளியாகியுள்ள ‘கருத்தவன்லாம் கலீஜா’ பாடலின் புரோமோ வீடியோவில், மைக், ரேடியோ உள்ளிட்ட செட்டப்புகள் காட்டப்படுகின்றன. எனவே. படத்தில் ஆர்.ஜே.வாகவும் சிவகார்த்திகேயன் நடித்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.