செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 19 டிசம்பர் 2017 (15:16 IST)

வேலைக்கு போகச் சொன்ன தந்தையை கொலை செய்த மகன்

மஹாராஷ்டிராவில் வேலைக்கு போக சொன்ன தந்தையை மகன் கொலை செய்துள்ளான். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் தானேவைச் சேர்ந்த தர்மா திண்டா விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் சுரேஷ் திண்டா. பட்டதாரியான இவர்  நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.  இதனால் தனது தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்து வந்துள்ளார்.
 
விவசாயத்தில் லாபம் இல்லாததால் குடும்பம் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. சுரேஷ் திண்டாவை வேலைக்கு போகுமாறு அவரது தந்தை திட்டியுள்ளார். இதனால் சுரேஷ் குடும்பத்தில் உள்ளவர்களுடன் அடிக்கடி சண்டையிட்டு இருக்கிறான். தந்தையின் வற்புறுத்தலை பொறுக்க முடியாத சுரேஷ், அவரை கொலை செய்ய திட்டமிட்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கோடாரியால் தந்தையின் தலையில் தாக்கியுள்ளான். இதனால் சம்பவ இடத்திலேயே தர்மா திண்டா உயிரிழந்தார்.
 
சுரேஷ் திண்டாவை கைது செய்துள்ள போலீஸார் அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.