ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (20:44 IST)

12 மாவட்டங்களுக்கு ஒரு ஐ.பி.எஸ்: முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க நியமனம்!

12 மாவட்டங்களுக்கு ஒரு ஐபிஎஸ் அதிகாரி என முன்னெச்சரிக்கை நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பருவமழை பெய்து வரும் நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கைகளை கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு தலா ஒரு ஐபிஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
சென்னையில் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது தலைமையிலான குழு சென்னையில் உள்ள பருவமழை மீட்பு பணிகளை கவனித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது