புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 7 நவம்பர் 2021 (12:41 IST)

அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப்பணி செய்யுங்கள்: திமுகவினருக்கு முதல்வர் வேண்டுகோள்!

அரசு அதிகாரிகளுடன் இணைந்து வெள்ள மீட்பு பணிகளை செய்ய வேண்டுமென திமுகவினருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும் அவரது அமைச்சர்களும் களத்தில் இறங்கி மீட்பு பணிகளுக்காக உத்தரவை பிறப்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழக அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் திமுக கட்சியினர் களுக்கும் தொண்டர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்
 
இதனையடுத்து திமுகவினர் களத்தில் இறங்கி வெள்ள மீட்பு பணிகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது