புதன், 11 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 1 டிசம்பர் 2024 (07:28 IST)

கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல்… இனி மழை எப்படி இருக்கும்?

வங்கக் கடலில் தோன்றிய ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழைப் பெய்து வருகிறது. சென்னையில் ஒரே நாளில் பெய்த கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறி தத்தளித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இந்த புயல் பாண்டிச்சேரி அருகே கரையைக் கடந்தது. அப்போது அதிகபட்சமாக 80 கி.மீ. வரையில் காற்று வேகமாக வீசியுள்ளது.

இந்நிலையில் தற்போது புயல் கரையைக் கடந்துள்ள நிலையில் இனி மழை எப்படி இருக்கும் என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் ”புயல் கரையை கடந்துவிட்ட நிலையில் ஞாயிற்றுக் கிழமையும் திங்கள் கிழமையும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைப் பெயக்கூடும்.

இன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில் இடங்களி கனமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள், காரைக்கால் ஆகிய பகுதிகளில்  கனமான மழை முதல் மிக கனமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.