செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 7 நவம்பர் 2021 (12:10 IST)

சென்னை மழை: கட்சி தொண்டர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்!

சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதையடுத்து பல இடங்களில் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனை அடுத்து தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களே களத்தில் இறங்கி மீட்பு பணிகளை துரிதமாக செய்துவர உத்தரவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் பிறந்த நாளில் செய்தி ஒன்றை மக்களுக்கு வெளியிட்டுள்ளார். அதில் மக்கள் நீதி மய்யம் உறவுகளே! மழை வெள்ளத்தால் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை விரைந்து செய்யுங்கள். அதுதான் நீங்கள் எனக்குத் தரும் சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்
 
இதனை அடுத்து வெள்ள மீட்பு பணிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்களும் களத்தில் இறங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது