''டேம் 999'' படத்துக்கு தமிழக அரசு தடை
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான சர்ச்சைக்குரிய படமான "டேம் 999'' படம் தமிழகத்தில் திரையிட தமிழக அரசு தடை விதித்துள்ளது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள "டேம் 999'' திரைப்படத்தை கேரளாவைச் சேர்ந்த சோகன் ராய் தயாரித்துள்ளார். கடல்சார் பொறியாளரான இவர் மாலுமியாக பணியாற்றி பின்னர் தயாரிப்பாளராக மாறியவர்.
"டேம் 999'' என்ற பெயரில் ஆங்கிலத்தில் இந்த படத்தை தயாரித்துள்ள இவர், சீனாவில் அணை ஒன்று உடைந்தபோது ஏற்பட்ட உயிரிழப்பை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படும். இந்தப் படத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணை உடைவதுபோல காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக குற்றம்சாற்றப்பட்டுள்ளது.
இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தப் படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்றும் அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு இந்தப் படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதித்துள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் இன்று பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் இந்த படம் வெளியிடுவதற்கான தடை உடனடியாக அமுலுக்கு வருவதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.