ஆ.இராசா நண்பர் சாதிக் பாட்சா தற்கொலை
சென்னை: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக மத்திய புலனாய்வுக் கழகத்தால் விசாரணை செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசாவின் நண்பர் சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆ.இராசாவுக்கு நெருக்கமானவராக இருந்த சாதிக் பாட்சா, கிரீன்ஹவுஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை அவரிடம் விசாரணை நடத்தி இருந்தது. ஆ.இராசா வீட்டிலும் அலுவலகத்திலும் மத்திய புலனாய்வுக் கழகமும், அமலாக்க இயக்ககமும் சோதனை நடத்தியபோது, கிரீன் ஹவுஸ் நிறுவனத்திலும், சாதிக் பாட்சாவின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழலில் கைமாறிய பணம் கிரீன் ஹவுஸ் நிறுவனத்தின் மூலமாகவே அயல் நாட்டுக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, ஐக்கிய அரபுக் குடியரசு நாட்டில் பதிவு செய்யப்பட்டு இயங்கிவரும் எடிசலாட் நிறுவனத்துடன் சாதிக் பாட்சாவுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் சாதிக் பாட்சா இன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று செய்தி வந்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர் டி.இராஜேந்திரன், “இறந்த நிலையில் சாதிக் பாட்சாவின் உடல் இன்று மதியம் 1.30 மணிக்கு சென்னை அப்பாலோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்துகொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். அதனை காவல் துறை புலனாய்வு செய்ய வேண்டும், செய்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
காவல் துறையினர் சாதிக் பாட்சாவின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சாதிக் பாட்சா இறந்தபோன நிலையில் தங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக அப்பலோ மருத்துவமனை கூறியுள்ளது.
வரும் 31ஆம் தேதிக்குள் 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்போவதாக ம.பு.க. தெரிவித்துள்ள நிலையில் இராசாவின் நண்பர் சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.