21ஆம் தேதி சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்
''சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 21ஆம் தேதி தாக்கல் செய்யப்படும்'' என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மாநகராட்சி சார்பில் சுகாதாரமான முறையில் குப்பைகளை எடுத்துச் செல்வதற்காக மூடப்பட்ட சிறிய குப்பை வாகனங்கள் 17 வழங்கப்பட்டுள்ளன. மேலும் பூங்காக்கள் மற்றும் சாலை மைய தடுப்பு சுவர்களை அழகுப்படுத்துவதற்கு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக 5 லாரிகளும், 2 பளுதூக்கி வாகனங்களும் வழங்கப்பட்டன.
அத்துடன் 4 அதிநவீன நடமாடும் கழிப்பறை வாகனங்களும் இன்று வழங்கப்பட்டன. இந்த நவீன நடமாடும் கழிப்பறை ஸ்டெயின் லெஸ் ஸ்டீலால் செய்யப்பட்டதாகும். இது மின் விசிறி, மின் விளக்குள் மற்றும் 5 அறைகள் ஆண்களுக்காகவும், 5 அறைகள் பெண்களுக்காகவும் என 10 அறைகள் கொண்டதாகும்.
வரும் 21ஆம் தேதி மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் அதன் மீதான விவாதம் 23ஆம் தேதி நடைபெற்று ஒப்புதல் பெறப்படும் என்று மேயர் சுப்பிரமணியன் கூறினார்.