1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

நெல்லை ‌விரைவு ர‌யி‌லி‌ல் திடீர் தீ விபத்து

நெல்லை விரைவு ரயில் காஞ்சிபுரம் தீ
நெ‌ல்லை ‌விரைவு ர‌‌யி‌லி‌ல் நே‌ற்‌றிரவு ‌திடீரென ‌தீ ‌விப‌த்து ஏ‌ற்ப‌ட்டது. இதனா‌ல் பய‌‌‌ணிக‌ள் யாரு‌க்கு‌ம் எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்பட‌வி‌ல்லை.

சென்னையில் இருந்து நேற்‌றிரவு நெல்லைக்கு புறப்பட்ட நெல்லை ‌விரைவு ர‌யி‌ல் கா‌ஞ்‌சிபுர‌ம் மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது ஒரு பயணிகள் பெட்டியின் அடி‌யி‌ல் தீ ‌பிடி‌த்து எ‌ரிவதை பார்த்த ஓ‌ட்டுன‌ர் ரயிலை நிறுத்தினார். இதையடுத்து பயணிகள் ரயிலில் இருந்து இறங்கினர்.

உடனடியாக தீ ஏற்பட்ட பெட்டியை ரயில்வே ஊழியர்கள் சோதித்தனர். அப்போது, ரயில் சக்கரத்தில் பிரேக் ஷு இறுக்கி பிடித்ததால் உரசல் காரணமாக தீப்பிடித்தது தெரியவந்தது. இதை‌த் தொட‌ர்‌ந்து உடனடியாக ‌‌தீ அணை‌க்க‌ப்ப‌ட்டது.

பி‌ன்ன‌ர் ரயில்வே பொ‌றியா‌ள‌ர்க‌ள் வரவழைக்கப்பட்டு அவர்கள் பிரேக்கை சரிசெய்தனர். இதன் பின்னர் 20 நிமிட காலதாமதத்திற்கு பிறகு மீண்டும் ரயில் புறப்பட்டு சென்றது.

இ‌ந்த ‌தீ ‌விப‌த்தா‌ல் பய‌ணிக‌ள் யாரு‌க்கு‌ம் எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்பட‌வி‌ல்லை.
About Writer
Webdunia