பிரதமரின் உருவ பொம்மையை எரித்த 30 பேர் கைது
இலங்கையில் போர் நிறுத்தம் செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மன்மோகன் சிங்கின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரது உருவ பொம்மையை எரித்த புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மெமோரியல் ஹால் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்த அவர்களுக்கு காவல்துறையினர் அனுமதி கொடுக்க மறுத்து விட்டனர்.
ஆனாலும் அவர்கள் சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாக வெளியே வந்து தென்னக ரயில்வே தலைமை அலுவலக வாசல் அருகே பிரதமர் மன்மோகன் சிங் உருவ பொம்மையை கொளுத்தினர்.
அப்போது அவர்கள் ஆவேசத்துடன் பிரதமருக்கு எதிராக கோஷமிட்டனர். உடனடியாக காவல்துறையினர் அவர்கள் அனைவரையும் வாகனத்தில் ஏற்ற முயன்றனர்.
அப்போது புரட்சிகர இளைஞர் முன்னணியினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரையும் உடனடியாக காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றி கொண்டு சென்றனர்.