கருணாநிதியுடன் நெடுஞ்சாலை ஆணையத் தலைவர் சந்திப்பு
சென்னை மதுரவாயல் சந்திப்பையும், துறைமுகத்தையும் இணைக்கும் உயர்மட்ட மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா மதுரவாயல் சந்திப்பில் வியாழக்கிழமையன்று நடைபெறுகிறது.
இந்த மேம்பாலத்திற்கான அடிக்கல்லை பிரதமர் மன்மோகன் சிங் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் சென்னை வருகிறார். நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் கருணாநிதியும் கலந்து கொள்கிறார்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் பிரிஜேஷ்வர் சிங், முதல் அமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து இந்த உயர்மட்ட மேம்பால அடிக்கல்நாட்டு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.
அப்போது மத்திய கப்பல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு, தேசிய நெடுஞ்சாலை ஆணைய உறுப்பினர் எஸ்.கே. பூரி, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் பெ. விஜயன், சென்னை துறைமுகப் பொறுப்புக்கழகத் தலைவர் சுரேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.