திருமங்கலத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு: இன்று மாலையுடன் பிரசாரம் முடிகிறது
திருமங்கலம் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இதனால் அரசியல் கட்சியினர் உச்ச கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
திருமங்கலம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் லதா அதியமான், அ.இ.அ.தி.மு.க சார்பில் முத்துராமலிங்கம், தே.மு.தி.க சார்பில் தனபாண்டியன், ச.ம.க சார்பில் பத்மநாபன் உட்பட 26 பேர் போட்டியிடுகின்றனர்.
தி.மு.க வேட்பாளர் லதா அதியமானை ஆதரித்து முதலமைச்சர் கருணாநிதி நேற்று முன்தினம் திருமங்கலம் பொதுக்கூட்டத்தில் பேசினார். தி.மு.க வேட்பாளரை ஆதரித்து உள்ளாட்சிதுறை அமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் மற்றும் மாநில அமைச்சர்கள் தொகுதி முழுக்க பிரசாரம் செய்தனர்.
அ.இ.அ.தி.மு.க பொது செயலர் ஜெயலலிதா கடந்த 3ஆம் தேதி தொடங்கி 4 நாட்கள் பிரசாரம் செய்தார். நேற்று மாலை திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ, மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோரும் அ.இ.அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வேட்பாளர் தனபாண்டியனை ஆதரித்து ஜனவரி 1ஆம் தேதி முதல் கிராமம் கிராமமாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று மாலை 5 மணிக்கு திருமங்கலம் தேவர் சிலை அருகே நடக்கும் பொதுக்கூட்டத்துடன் விஜயகாந்த் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார். விஜயகாந்த் மனைவி பிரேமலதா தொகுதிக்குள் பிரசாரம் செய்து வருகிறார்.
ச.ம.க தலைவர் சரத்குமார், துணைத்தலைவர் ராதிகா ஆகியோர் வேட்பாளர் பத்மநாபனை ஆதரித்து 10 நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது. 9ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. மொத்தம் 190 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன. 500 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், மாற்று இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 12ஆம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இன்று மாலை 5 மணிக்குள் பிரசாரம் முடிக்கவும், அதன் பிறகு தொகுதிக்குள் தங்கியுள்ள வெளியூர்க்காரர்கள் வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. தொகுதியில் உள்ள எல்லா திருமண மண்டபங்களும் சீல் வைக்கப்படுகிறது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 476 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் ஒரே நாளில் 90 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் பாதுகாப்பு பணியில் 800 துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். பொதுமக்களிடம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.