1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

பொங்கலு‌க்கு 80 சிறப்பு பேரு‌ந்துக‌ள் இயக்கம்

பொங்கல் சிறப்பு பேருந்துகள் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம்
பொ‌‌ங்க‌ல் ப‌ண்டிகையை மு‌ன்‌னி‌ட்டு செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து வெ‌‌ளியூ‌ர்களு‌க்கு 80 ‌சிற‌ப்பு பேரு‌ந்து‌க‌ள் இய‌க்க‌ப்பட உ‌ள்ளது எ‌ன்று த‌மிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் இ‌ன்று வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள செ‌ய்‌திக‌்கு‌றி‌ப்‌பி‌ல், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஜனவரி 1ஆ‌ம் தேதி முதல் 13ஆ‌ம் தேதி வரை திருச்சி, மதுரை, கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு சென்னையில் இருந்து 80 சிறப்பு பேரு‌‌ந்துகளை இயக்க உள்ளது.

அதே போல் மேற்கண்ட ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்புவதற்கும் 15ஆ‌ம் தேதி அன்றும் 80 சிறப்பு பேரு‌ந்துக‌ள் இயக்கப்பட உள்ளது எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டுள்ளது.
About Writer
Webdunia