முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 21ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சென்னை கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.அப்போது, கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழியை திருப்பி கூறினர்.தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சி மலர சபதம் ஏற்போம் என்பது உள்பட 15 உறுதிமொழி அப்போது எடுக்கப்பட்டது.மேலும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், ஜனநாயக...