சென்னை : தமிழ்நாட்டில் இனி புதிய மதுக்கடைகள் எதையும் திறப்பதில்லை என்றும், தற்போது மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை என்றிருப்பதிலும், 1 மணி நேரத்தைக் குறைத்து, 2009 ஜனவரி 1ஆம் தேதி முதல் காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரையில் மட்டுமே மதுக்கடைகள் செயல்படும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்து ஆணையிட்டுள்ளார்.