சென்னை: சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி பூங்காவில் மது விருந்து அளிக்கப்பட உள்ளது என்று விளம்பரம் செய்யப்பட்டிருப்பது உண்மை என்றால் தமிழக அரசு இது குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் சட்டத்திற்கு எதிராக செயல்படும் சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் மீதும், இதற்கு பொறுப்பான மற்றவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.