1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

திருமங்கலம் தொகுதிக்கு ஜன.9ல் இடைத்தேர்தல்

திருமங்கலம் இடைத்தேர்தல் மதிமுக தேர்தல் ஆணையம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த மதிமுக-வைச் சேர்ந்த வீர இளவரசன் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் (ஜனவரி) 9ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது.

இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

அதன் விவரம் வருமாறு: திருமங்கலம் தொகுதி தேர்தல் அறிவிக்கை வரும் 15ஆம் தேதி வெளியிடப்படும். வேட்பு மனு தாக்கல் செய்ய இம்மாதம் 22ஆம் தேதி கடைசி நாள் என்றும், அதற்கு அடுத்த நாள் மனுக்கள் பரிசீலிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைய உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு வரும் 26ஆம் தேதி கடைசி நாளாகும். வாக்குப்பதிவு நாள் ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும்.

பதிவான வாக்குகள் அடுத்த மாதம் 12ஆம் தேதி எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.