சென்னை: பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் பதவி விலக முன் வந்தும் கூட மத்திய அரசு அதனை ஏற்க மறுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அவரது பதவி விலகலை மத்திய அரசு ஏற்பதுடன், புதிய புலனாய்வு அமைப்பும் தற்போதைய சூழலில் தேவையற்றது என்றும் கூறியுள்ளார்.