திண்டுக்கல்லில் ஈழத் தமிழர் ஆதரவுப் பேரணி!
இலங்கையில் போரை நிறுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஈழத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
திண்டுக்கல் குமரன் பூங்காவில் தொடங்கிய இந்தப் பேரணி, மணிக்கூண்டில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகில் நிறைவடைந்தது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், கிறித்தவக் கன்னியாஸ்திரிகள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இலங்கையில் தமிழர்கள் சந்திக்கும் துயரங்களைச் சித்தரிக்கும் படங்களையும், போரை நிறுத்த வலியுறுத்தும் முழக்கங்கள் அடங்கிய அட்டைகளையும் பேரணியில் பங்கேற்றவர்கள் ஏந்தியிருந்தனர்.
இந்தப் பேரணியைப் பெரியார் திராவிடர் கழகம் ஒருங்கிணைத்திருந்தது.
|