1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

காவ்யா மாதவனுக்கு விரைவில் திருமணம்!

நடிகை காவ்யா மாதவன் திருமணம்
பிரபல நடிகை காவ்யா மாதவன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.

குவைத்தில் பணியாற்றும் நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், ஒரு சில படங்களே தன் வசம் உள்ளதால், அவற்றை முடித்துக் கொடுத்த பின் தங்கள் திருமணம் நடைபெறும் என்றும் கொச்சியில் வியாழனன்று செய்தியாளர்களிடம் காவ்யா மாதவன் கூறினார்.

கடந்த 1991ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் அறிமுகமான காவ்யா மாதவன், பின்னர் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றிலும் காவ்யா நடித்துள்ளார்.

திருமணத்திற்குப் பின் நடிப்பது குறித்து இப்போதே எதுவும் கூற முடியாது என்றார் காவ்யா.
About Writer
Webdunia