சென்னை : கைது செய்யப்பட்ட புதிய தமிழகம் கட்சியினர் அனைவரையும் விடுதலை செய்யவும், அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவும் முதலமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளேன் என்று தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, எனவே கட்சித் தொண்டர்கள் அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.