1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. lucas trego lost his family in earth quake

சோகம்!.. வெனிசுலா நிலநடுக்கத்தில் குடும்பத்தை இழந்த கால்பந்து வீரர்!..

lucas
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் கடந்த 24ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 3 மணி அளவில் 7.2 மற்றும் 7.5 என்கிற ரிக்டர் அளவில் அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. கடந்த 100 வருடங்கள் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட இந்த அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் உள்ள அடுக்கு குடியிருப்பு வீடுகள் மற்றும் பல்வேறு கட்ட்டிடங்களும் சீட்டு கட்டு போல சரிந்து கீழே விழுந்தன..

எனவே மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 1450 பேர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. நிலநடுக்கத்தால் 700க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்திருக்கிறது. 55 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். எனவே தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான் வெனிசுலாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்து வீரர் லூகாஸ் ட்ரெஜோ தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளை இழந்துள்ளார்.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது லூகாஸ் வேறு ஒரு இடத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார். நிலநடுக்கத்தில் அவரின் மனைவி  மற்றும் இரு குழந்தைகளும் தங்கியிருந்த அடுக்குமாடி கட்டிடம் நொறுங்கி விழுந்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு அவர்கள் மூவரின் உடலும் தற்போது மீட்கப்பட்டிருக்கிறது..
அடுத்த கட்டுரையில்
வைகோவை பற்றி பேச ஆரம்பித்தால், மதிமுகவின் மொத்த வரலாறும் அடியோடு முடிந்துவிடும்: சிவசங்கர்