சென்னை: எதற்கெடுத்தாலும் அண்டை மாநிலத்தை சுட்டிக்காட்டி புள்ளி விவரங்களை அளிக்கும் கருணாநிதி, அரசு பேருந்துகளில் தாய்மொழியில் டிக்கெட் கொடுப்பதில் ஏன் அண்டை மாநிலத்தைப் பின்பற்றவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா, அரசுப் பேருந்துகளில் பயணச் சீட்டுகள் இனி தமிழ் மொழியில் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.